திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகில் உள்ள மறுகால்தலை என்னும் இடத்தில் அமைந்துள்ள பூலாவுடையார் சாஸ்தா கோவில் அருகே அமைந்த மலை ஒன்றின் மேற்கு பக்கத்து தரையில் குகை ஒன்று உள்ளது. இங்கு சில சமண படுக்கைகள் காணப்படுகின்றன உள்ளூர் மக்கள் இதனை பஞ்சபாண்டவர் படுக்கை என அழைக்கின்றனர்.
தமிழகத்தில் சமணம்
தமிழகத்தை பொறுத்தமட்டில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சமனப்படுகைகள் காணப்படுகின்றன. சில பாதுகாக்கப்பட்டும், பல கல்வெட்டுகள் பாதுகாக்கப்படாமலும் உடைந்தும் காணப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டம் கழுகுமலை, மறுகால்தலை ஆகிய பகுதிகளில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர் .அவர்களில், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பொன் கார்த்திகேயனிடம் சமணர்கள் வருகை பற்றி கேட்டபொழுது ,தமிழர்கள் வழிபாடு என்பது குறிஞ்சி, முல்லை ,மருதம் ,நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் அதற்கான தெய்வங்களுமான முருகன் , திருமால் ,இந்திரன் ,வருணன் ,கொற்றவை ஆகியோரை வழிபட்டு வந்த நிலையில், கிமு மூன்றாம் நூற்றாண்டில் சந்திரகுப்தர், இன்று பீகார் என்று அழைக்கப்படும் பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு இருந்து ஆட்சி செய்தார் அவ்வாறு இன்று பீகார் என்று அழைக்கப்படும் பாடலிபுத்திரத்தை தலைநகராகக் கொண்டு இருந்து ஆட்சி செய்கையில் தென்னிந்தியாவில் தனது சமண சமயத்தை பரப்புவதற்காக சில சமண துறவிகளை பாடலிபுத்திரத்தில் இருந்து தென்னிந்தியாவிற்கு அனுப்பினர் அவர்களில் சிலர் தமிழகத்தை வந்தடைந்தனர். இவ்வாறு தமிழகத்திற்கு வந்த சமண துறவிகள் ஆங்காங்கே உள்ள மலைக் குன்றுகளிலும் ,குகைகளில் தங்கி துறவு பூண்டும் மக்களை வழிநடத்த சமணப் பள்ளிகளையும் உருவாக்கினர் என்று கல்வெட்டுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது . இவ்வாறே தமிழகத்தில் சமணர்களின் வருகை உறுதியானது .
சமணர் கல்வெட்டு
1906 ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக இருந்த ஹென்றி அமைடு என்பவர் இதனை கண்டறிந்தார் இது பௌத்த துறவிகளுக்கான இடமாக இருக்கலாம் என கருதினார். இந்த குகையின் நெற்றியில் அமைந்துள்ள காடியின் கீழ் அமைந்துள்ள நீர் விளிம்பு பகுதிகளில் ஒரு தமிழிக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ளது.
"வெண்காஸிபன் குடுப்பிதா கல் காஞ்சனம்" என பெரிய எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு எழுத்துக்களும் ஒரு அடிக்கு மேலான அளவிலும் தொலைபேசி காணக்கூடிய வாரம் வெட்டப்பட்டுள்ளன வெண்காஸிபன் என்பான் ஏற்படுத்தித் தந்த கல் காஞ்சனம் எனப் பொருள் கொள்ளலாம். இங்கு தமிழ் பிராமியில் இல்லாத' ஸ' எனும் எழுத்து பயன்படுத்தப்பட்டுள்ளது. சில படுக்கைகள் முழுமையானதாகவும் சில முற்றுப்பெறாததாகவும் காணப்படுகின்றன.
கல்வெட்டின் வாசகம்:
வெண்காஸிபன் கொடுபித கல்கஞ்சனம்
( தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை)
இதனை வேன் கோசிபன் குடுப்பிட கலக்காஞ்சனம் என்ற கிருஷ்ண சாஸ்திரி அவர்களும்
வேன் கோசிபன் குடுப்பித கல் காஞ்சனம் என்று சுப்பிரமணிய அய்யர் ,நாராயணராவ் ,டிவி மகாலிங்கம் ஆகியோரும்
"வெண் காசிபன் கொடுப்பிதக் கல் கஞ்சனம்," என்று இ ரா. நாகசாமி மற்றும் மயிலை சீனி அவர்களும்
வெண்காஸிபன் குடுப்பித கஞ்சனம் என்று ஐ .மாகாதேவன் அவர்களும் வாசித்து உள்ளதாக தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை 2006 இல் வெளியிட்ட தமிழ் பிராமிகல்வெட்டுகள் என்னும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது
(கல்வெட்டில் உள்ளபடி)
"வெண் கோஸிபன் குடு(ப்)பி(த்)த கல் கஞ்சணம் என வாசிக்க முடிந்தது"
ஆய்வு சவால்
இக் கல்வெட்டு ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் சவாலாக அமைந்திருந்தது அதற்கு கல்வெட்டு குறிப்பிடும் கல் கஞ்சனம் என்ற சொல்லை காரணம் தோராயமாக வெண்காஸிபனால் இந்தக் குகையில் ஒரு கட்டட அமைப்பு அமைத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று பொருள் கொள்ளப்பட்டதே தவிர கல் கஞ்சனத்திற்கான பொருளை ஆய்வாளர்களால் அறிய இயலவில்லை இந்நிலை ஒரு நூற்றாண்டுக்கும் மேல் நீடித்திருந்தது.
2017 ஐ மகாதேவன் அவர்கள் இச்சொல்லின் பொருள் முடிச்சை அவிழ்த்தார். அதாவது தமிழில் கசனை என்ற சொல் ஈரம், ஈரப்பதம் என்றும் கசி என்ற வினைச்சொல்லுக்கு ஈரம் கசிந்து வழிதல் என்றும் பொருள் மேலும் கசி என்ற கன்னட சொல்லுக்கு வழிந்து ஓடுதல் என்று பொருள் இவற்றோடு கஞ்சனம் சொல்லை ஒப்பிட்டு நோக்கினால் நீர்க்கசிவு வளைந்து ஓடும் தடம் என்னும் பொருள் நேரடியாக கிடைக்கிறது ஆதலால் இக்கல்வெட்டில் உள்ள கல்கஞ்சனம் என்ற சொல் குறிப்பது குகையின் நெற்றியில் வெட்டப்பட்டுள்ள சல தாரகையே ஆகும்.
கல் கஞ்சனம்
கஞ்சனம் என்ற சொல்லின் முன் கல் என்ற அடைமொழி வைத்ததற்கு காரணம் உண்டு. பெய்யும் மழை நீர் வீட்டினுள் கசையாதவாறு மேற்கூறையில் சலதாரை ஓடுகளை அமைப்பதுண்டு .வீட்டு கழிவு நீரை சுடுமண் கலங்கள். குழாய்கள் கொண்டு பழங்காலத்தில் வெளியேற்றப்பட்டது பற்றி அகழாய்வுகள் உணர்த்துகின்றன இந்த கஞ்சனங்களில் இருந்து இது வேறுபட்டது என்பதை உணர்த்தத்தான் கல்வெட்டில் கல் என்ற அடைமொழி கொண்டு கஞ்சனம் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார் .இப்போது கல்வெட்டின் பொருளை பாருங்கள் ,வெண்காஸிபன் என்பவரால் அமைத்துக் கொடுக்கப்பட்ட நீர் வடிந்து என்பதே கல்வெட்டு கூறும் செய்தி
கல்கஞ்சனம் பற்றி ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே. ராஜகுரு அவர்கள் கஞ்சம் என்ற சொல்லுக்கு நீர் எனவும் பொருள் உண்டு. வாயின் வளைந்து மேற்பகுதி அன்னம் , அணம் எனப்படுகிறது காரணப்பெயராக அனம் என்ற சொல் குறிப்பதாக கொள்ளலாம் என்று கூறுகிறார் .மேலும் குகையின் வளைந்து மேற்பகுதியில் நீர்படியாமல் தடுக்க வெட்டப்பட்ட காடியை கஞ்சனம் என்ற சொல் குறிப்பதாக கொள்ளலாம். இது கல்லில் அமைக்கப்பட்டதால் கல்கஞ்சனம் எனப்பட்டது.
வெண்காஸிபன் பெயர் ஆசிவத்துடன் தொடர்புடையதா என பேராசிரியர் நெடுஞ்செழியன் கருதுகிறார் .செந்தமிழ் சொற்பிறப்பியல் பேராவராதனையை காயன் காசிபன் அதாவது காய் நின்ற பெயர் சொல்லில் இருந்து காயிபன் னும் பிறகு காசிபனும் தோன்றியதாக கூறப்படுகிறது என்று கூறுகின்றனர்.தொடர்ச்சி மறுகால்தலை-2



கருத்துகள்
கருத்துரையிடுக