முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

சமணர் கல்வெட்டு -1 -மறுகால்தலை

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகில் உள்ள மறுகால்தலை என்னும் இடத்தில் அமைந்துள்ள பூலாவுடையார் சாஸ்தா கோவில் அருகே அமைந்த மலை ஒன்றின் மேற்கு பக்கத்து தரையில் குகை ஒன்று உள்ளது.   இங்கு சில சமண படுக்கைகள் காணப்படுகின்றன உள்ளூர் மக்கள் இதனை பஞ்சபாண்டவர் படுக்கை என  அழைக்கின்றனர். தமிழகத்தில் சமணம் தமிழகத்தை பொறுத்தமட்டில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சமனப்படுகைகள் காணப்படுகின்றன. சில பாதுகாக்கப்பட்டும், பல கல்வெட்டுகள் பாதுகாக்கப்படாமலும் உடைந்தும் காணப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டம் கழுகுமலை, மறுகால்தலை ஆகிய  பகுதிகளில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர் .அவர்களில், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பொன் கார்த்திகேயனிடம் சமணர்கள் வருகை பற்றி கேட்டபொழுது ,தமிழர்கள் வழிபாடு என்பது குறிஞ்சி, முல்லை ,மருதம் ,நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் அதற்கான தெய்வங்களுமான முருகன் , திருமால் ,இந்திரன் ,வருணன் ,கொற்றவை ஆகியோரை வழிபட்டு வந்த நிலையில், கிமு மூன்றாம் நூற்றாண்டில் சந்திரகுப்தர், இன்று பீகார் என்று அழைக்கப்படும் பாடலிப...
சமீபத்திய இடுகைகள்

வனங்களின் அரண்கள்

             வனங்களின் அரண்கள் இப்புவியானது சுமார் மூன்றில் ஒரு பங்கு நிலத்தால் சூழப்பட்டுள்ளது இந்த நிலப்பரப்பில் சுமார் 31% காடுகள் பரவி காணப்படுகின்றன. இக்காடுகளை மனிதர்களின் வாழ்வை அவர்களின் பரிணாமத்தை நிலைத்திருக்க செய்கின்றன. இத்தகைய காடுகளின் உள்ளடக்கமாக பல்வேறு வகையான தாவரங்கள் விலங்குகள் பறவைகள் நுண்ணுயிர்கள் வாழ்வை நகர்த்துகின்றன. இவை அனைத்தும் இணைந்தே தான் கானகத்தை காக்கும் காவலர்களாக திகழ்கின்றனர். இருப்பினும் இவர்களில் இன்றியமையாத இடத்தை பெற்று இருப்பது பலம் வாய்ந்த யானைகள் ஆகும். தமிழின் சங்க இலக்கிய நூலான  அகநானூறில் கூட  " காட்டு காவலன் யானை காட்டுக்கு உறுப்பின் உயர்வு உடையனான் "எனக் யானையை காற்றின் காவலன் என்று  குறிப்பிட்டுள்ளனர். ஒரு காட்டின் நிலையை அதன் தன்மையை இந்த யானைகளை நன்கு அறிந்து வைத்துள்ளன. பழந்தமிழர் இடத்தில் யானைகள்   சங்க இலக்கியங்கள் யானைகளை பற்றி மதக்கரி, வேழம், களிறு என பல்வேறு பெயர்களில் அழைத்துள்ளனர். திருக்குறள், கலித்தொகை 400 போன்ற நூல்களில் முக்கியத்துவம் பெற்ற விலங்காக யானைகள் திகழ்கின்றன ....

சீர்மிகு சிலம்பும் வேங்கைகானலும்

   தமிழர்களுக்கும் தமிழுக்கும் பெருமை சேர்க்க பல இலக்கிய அமைப்புகளும், நூல்களும் தமிழில் காணப்பட்டாலும் ஐம்பெருங்காப்பியங்களில் முதன்மைத்துவம் பெற்றக் காப்பியமான சிலப்பதிகாரம் பற்றி நம்மில் பலர் அறிந்துள்ளோம். சிலப்பதிகாரம் பற்றிய அறிந்த நாம் அது உண்மையா ?பொய்யா? என்று நினைத்ததில்லை. அது கற்பனைக் கதையா? வரலாற்று நிகழ்வா? என்ற சந்தேகம் கொண்டு யாரும் கேட்டதில்லை. கண்ணகி மதுரையை விட்டு சேரநாடு சென்றாள் என்று படித்தறிந்த நாம் அவள் எங்கே  சென்றாள் என்பதைப் பற்றிய சிந்தனைகள் நமக்கு எழுந்ததில்லை .இது எல்லாவற்றையும் விட சேர மன்னன் கோயில் கட்டினான் என்பதைக் குறிப்பு வைத்து படித்த நமக்கு அந்தக் கோயில் எங்கே அமைந்துள்ளது என்றும் தேடும் எண்ணம் ஏன் வரவில்லை? ஒருவேளை உண்மையிலேயே கோயில் இருக்கிறதா இல்லை வெறும் கட்டுக்கதையா ? என்ற இன்றைய பல கேள்விகளுக்கு தீர்வு காணும் வகையில் தான் இக்கட்டுரை எழுதப்பட்டு உள்ளது .  வரலாற்று நிகழ்வு   ராமாயணமும் மகாபாரதம் போன்ற புராண இதிகாசம் வரலாறுகளை பற்றி பாரம்பரியம் மற்றும் ஆன்மீக சாயல் கொண்டு பேசும் தமிழ் சமூகம், குடிமக்களின் அடிப்படை வாழ்...