முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சமணர் கல்வெட்டு -1 -மறுகால்தலை

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகில் உள்ள மறுகால்தலை என்னும் இடத்தில் அமைந்துள்ள பூலாவுடையார் சாஸ்தா கோவில் அருகே அமைந்த மலை ஒன்றின் மேற்கு பக்கத்து தரையில் குகை ஒன்று உள்ளது.   இங்கு சில சமண படுக்கைகள் காணப்படுகின்றன உள்ளூர் மக்கள் இதனை பஞ்சபாண்டவர் படுக்கை என  அழைக்கின்றனர். தமிழகத்தில் சமணம் தமிழகத்தை பொறுத்தமட்டில் புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை போன்ற மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் சமனப்படுகைகள் காணப்படுகின்றன. சில பாதுகாக்கப்பட்டும், பல கல்வெட்டுகள் பாதுகாக்கப்படாமலும் உடைந்தும் காணப்படுகின்றன. திருநெல்வேலி மாவட்டம் கழுகுமலை, மறுகால்தலை ஆகிய  பகுதிகளில் வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் ஈடுபட்டனர் .அவர்களில், கல்வெட்டு ஆராய்ச்சியாளர் பொன் கார்த்திகேயனிடம் சமணர்கள் வருகை பற்றி கேட்டபொழுது ,தமிழர்கள் வழிபாடு என்பது குறிஞ்சி, முல்லை ,மருதம் ,நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலங்களுக்கும் அதற்கான தெய்வங்களுமான முருகன் , திருமால் ,இந்திரன் ,வருணன் ,கொற்றவை ஆகியோரை வழிபட்டு வந்த நிலையில், கிமு மூன்றாம் நூற்றாண்டில் சந்திரகுப்தர், இன்று பீகார் என்று அழைக்கப்படும் பாடலிப...